...
செய்திகள்பதுளைமலையகம்

பதுளை நகரில் இரண்டாம் நாளாகவும் போராட்டம்.

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் மலையக மக்களின் இருப்பை உறுதி செய்யவும் அவர்களுடைய தொழில் பிணக்குகள் தொடார்பாகவும் பெருந்தோட்ட கம்பெனிகளின் அடாவடி நிர்வாகத்திற்க்கு பதிலடி தரும் நோக்குடனும்
உரத்தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் இன்றைய தினம் வடிவேல் சுரேஷ் அவர்களுடைய தலைமையில் மாபெரும் புரட்சி போராட்டம் இரண்டாம் கட்டமாக பதுளையில் நகரில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பதுளை நகரில் ஊர்வலம் சென்றார்கள்.

இதன்போது கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ்
‘மலையக மக்களின் இருப்பையும் உரிமையையும் மீட்டெடுக்க நேற்றையதினம்
ஹப்புத்தளை நகரில் ஒன்று கூடிய நாம் அனைவரும் இன்றைய தினம் பதுளையில் கரம் கோர்த்து நிற்கின்றோம் .நேற்றைய போராட்டத்தில் நான் தெரிவித்ததை போன்று இது முடிவல்ல ஆரம்பம் நாட்டில் அரிசி தட்டுப்பாடு உரத் தட்டுப்பாடு பால்மா தட்டுப்பாடு எரிவாயு தட்டுப்பாடு தட்டுப்பாடுகள் மட்டுமே தட்டுப்பாடின்றி கிடைக்கின்றது நம் மக்களுக்கு எம் இலங்கை திருநாடு வறுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது! பொறுமை இழந்து இன்று நாட்டு மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கி இருக்கின்றார்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்க்கை வருமானத்திற்கும் அல்லோல பட்டுக்கொண்டிருக்கும் மலையக மக்களும் நாட்டு மக்களின் நிலைமை பொருளாதார பின்னடைவு மலையக மக்கள் தேயிலை கொழுந்தையும் விவசாயிகள் புட்களை உண்ண வேண்டிய அவல நிலை சாது மிரண்டால் காடு கொள்ளாதுஎன்பதனைப் போன்று மக்கள் பொறுமையைக் கடந்து இன்று வீதியில் இறங்கி இருக்கின்றார்கள் எமக்கான உரிமைகளை மீட்டெடுக்க புரட்சி வடிவில் இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கின்றோம்.’

ராமு தனராஜா

Related Articles

Back to top button


Thubinail image
Screen