செய்திகள்

பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு.!

நாடு முழுவதும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கலாநிதி அமைச்சர் ரமேஸ்பத்திரன தெரிவித்துள்ளார். வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்ர்மார்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படுகிறது.

இதுவரை நாட்டில் 20 இலட்சத்து 23 ஆயிரத்து 256 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கான கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் பணி இன்று ஆரம்பமானது. நுவரெலியா காமினி தேசிய பாடசாலையில் ஆரம்பமான தடுப்பூசி திட்டத்தில் முதற்கட்டமாக அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடையோர், பொலிஸார், தோட்ட அதிகாரிகள், தோட்ட முன்கல பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நுவரெலியா காமினி தேசிய பாடசாலைக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தடுப்பூசி ஏற்றும் பணிகளை கண்காணித்ததோடு நுவரெலியா மாவட்டத்துக்கென 50 ஆயிரம் சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். அவற்றில் கொவிட் அபாயமுள்ள பகுதிகளில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கென 40 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பதுளை மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளிலும் இன்று முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதாக மாவட்ட பொதுசுகாதார சங்கத்தின் உப செயலாளர் தெரிவித்துள்ளார். தியத்தலாவை, பண்டாரவளை, எல்ல ஆகிய பிரதேசய செயலக பிரிவுகளுக்குட்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதற்கட்ட பணிகளில் 700 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் தொடர்ந்தும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

தடுப்பூசி வேலைத்திட்டத்தை வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவுப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். முதற்கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 2ம் கட்ட தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Mexico’s nurse Irene Ramirez receives the first of two Pfizer/BioNTech Covid-19 vaccine jabs, at the General Hospital in Mexico City, on December 24, 2020. – Mexico’s government started inoculations on Thursday after the first 3,000 doses produced by US pharmaceutical giant Pfizer and its German partner BioNTech arrived by courier plane from Belgium. (Photo by PEDRO PARDO / AFP)

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com