மலையகம்

பதுளை மக்களை அச்சுறுத்தும் அடையாளம் தெரியாத மனிதர்கள்

பதுளை – ஹாலிஎல பிரதேசத்திற்கு உட்பட்ட சில தோட்டங்களில் அடையாளம் தெரியாத சில மனிதர்கள் உலாவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரவு வேளைகளிலும் பகல் வேளைகளிலும் அவர்கள் மக்களை அச்சுறுத்தி வருவதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் இந்த சம்பவம் இடம்பெற்று வரும் நிலையில், சில பகுதிகளில் திருட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக ரொசட், உனுகல்லை ஆகிய தோட்டங்களிலேயே இந்த சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வரும் நிலையில், அந்த பகுதியில் அச்சமடைந்த பெண்ணொருவர் மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த பகுதிக்கு பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தலையிலான குழுவொன்று சென்று மக்களிடம் கலந்துரையாடியுள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பில், ஹாலிஎல காவற்துறையினரால் குறித்த பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

67 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button