செய்திகள்மலையகம்

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் பிசிஆர் பரிசோதனை

பதுளை மாநகர சபை, ஹாலிஎல பிரதேச சபை ஆகியவற்றில் வசிப்பவர்களில் கொவிட் 19 வைரஸ் நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கும், சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் ஹாலிஎல பொது சுகாதார பரிசோதக அதிகாரிகளால் 90 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் நேற்று மாலை (18) பெறப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதை தொடர்ந்து சமூக பரவலை தடுக்கும் முகமாக இவ்வாறான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மக்களை விழிப்புணர்வு ஊட்டும் செயற்பாடுகள் பொது சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்படுவதாக மேலும் அறியமுடிகிறது.

Related Articles

Back to top button