செய்திகள்பதுளைமலையகம்

பதுளை மாவட்டத்தில் கிராமமொன்று தனிமைப்படுத்தலில்

பதுளை – வெலிமடைப் பகுதியின் புகுல்பொலை கிராமமொன்று இன்று முதல் தொடர்ந்து இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட கொவிட் 19 தடுப்பு செயலணியினர் தெரிவித்தனர்.

இரு தினங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் 40 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்தே மேற்படி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ககாகொல்லை மற்றும் பிந்துனுவௌ கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு குறித்த 40 பேரும் இன்றைய தினம் அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெலிமடைப் பகுதியின் ரேந்தபொல மற்றும் பொரகஸ் ஆகிய கிராமங்களின் வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடிவிடுவதற்கு வெலிமடை பொது சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button