...
பதுளை

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தம்

பதுளை மாவட்டத்தில் நிலவி வருகின்ற கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் மண்சரிவு அனர்த்த நிலைமைக்குட்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள பசறை பிரதேச சபையில் இ.தோ.கா பிரதேச உறுப்பினர் வேலு ரவி, இ.தொ.கா வாலிப காங்கிரஸ் வட்டார உறுப்பினர் சுதாகர், பசறை பிராந்திய அமைப்பாளர் எஸ்.கோவிந்தராஜ் ஆகியோரின் துரித முயற்சியால் பாதிப்புக்குள்ளான மக்களின் சுகநலன் பாதுகாக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பதுளை மாவட்டத்தில் நிலவி வருகின்ற மழையுடன் கூடிய காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகின்றது.

பசறை பிரதேச கனவரல்ல மவுசாகல தோட்டத்தில் மண்சரிவு அனர்த்த நிலைக்குட்பட்ட 17 ஆம் மற்றும் 4 ஆம் இலக்க லயன் குடியிருப்புகளில் வாழும் 5 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும், கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும், எல்டெப் லோவர் பிரிவைச் சேர்ந்த ஐந்து குடியிருப்புக்களை சேர்ந்த 15 பேரும் பாதிப்புக்குள்ளாகினர். இது தொடர்பாக அனர்த்த நிலைமையறிந்த பசறை பிரதேச இ.தொ.கா உறுப்பினர் பிரதமரின் இணைப்பு செயலாளரும் இ.தொ.கா உப தலைவருமாகிய செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அவர் குறித்த மக்களுக்கு தற்காலிக இடைத்தங்கல் முகாம்களை அமைத்து பாதிப்புக்குள்ளான மக்களை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பசறை பிரதேச செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen