செய்திகள்

பதுளை- றொக்ஹில் அருள்மிகு காளியம்மன் திருக்கோயில்..

பதுளை மாநிலத்தில் கோயில் கொண்ட தாயே
பாதகங்கள் தடுத்து எம்மை காவல் செய்ய வேண்டுமம்மா
அதர்மங்கள் தகர்த்தெறிந்து தர்மம் உறுதிபெற
அருள்தருவாய் எங்கள் தாயே காளியம்மா.. 
செழுமைமிகு உயர்நிலத்தில் குடியிருக்கும் தாயே செம்மை நிறை வாழ்வுக்கு வழிசெய்ய வேண்டும் 
துன்பங்கள் நெருங்காத பெருவாழ்வு நாமடைய
துணையிருப்பாய் எங்கள் தாயே காளியம்மா.. 
அரணாக இருந்தெமக்கு அருள் செய்யும் தாயே
அச்சமில்லா வாழ்வுக்கு நெறிசெய்ய வேண்டும் 
நிம்மதியே நிலைத்துவிட நாமெல்லாம் நலமடைய
வழிசெய்து விதிவகுப்பாய் எங்கள் தாயே  காளியம்மா.. 
தேயிலைமலை சூழ அமர்ந்தருளும் தாயே
தொய்வில்லா வாழ்வுக்குத் துணையிருக்க வேண்டும்
அண்டவரும் தீமைகளை அகற்றியெம்மைக் காக்க 
அரணாக இருந்திடுவாய் எங்கள் தாயே காளியம்மா.. 
மலை சூழ்ந்த பெருநிலத்தில் நிலைபெற்ற தாயே
மலைத்து நின்று தடுமாறும் நிலையெமக்கு வேண்டாம் 
வளமாக மகிழ்ச்சி பொங்க நாம்வாழ வழிசெய்து
காவல் செய்வாய் எங்கள் தாயே காளியம்மா.. 
நம்பித் தொழும் எங்களுக்கு வலிமை தரும் தாயே
நாடிவரும் எங்களை நீ காத்தருள வேண்டும்
எதிர்காலம் ஏற்றமுற்று நாம் வாழ்வதை
உறுதிசெய்வாய் எங்கள் தாயே காளியம்மா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button