
பதுளை நகரில் வர்த்தக சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களும் இனைந்து கொண்டனர்.
இதன்போது அண்மையில் ராஜாங்க அமைச்சு பதவியை பொருப்பேற்ற இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமாரின் உருவ பொம்மை ஒன்று பதுளை மாகாண சபைக்கு முன்பாக செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெருந்தோட்ட தொழிலாளர்கள் குறித்த உருவ பொம்மைக்கு முன்பாக ஒப்பாரி வைத்து செருப்பினால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமு தனராஜா