செய்திகள்

பதுளை- வேவஸ்ஸதோட்டம், மாணிக்கவல்லி பிரிவு அருள்மிகு ஸ்ரீ காளியம்பாள், ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் ..

 கருணையுள்ளம் கொண்டவளே காளியம்மா
எங்கள் கவலைகளைத் தீர்த்தருள வாராயம்மா
கேட்டவரம் தந்தருள வேண்டுமம்மா
குறைவின்றி வாழவழி தருவாயம்மா
ஆஞ்சநேயர் ஆலயத்தை அருகு கொண்டவளே காளியம்மா
எம்மை அரவணைத்து, அருளளிக்க வாராயம்மா
துணையிருந்து எமைக்காக்க வேண்டுமம்மா
நாம் நிறை வாழ்வு வாழ வழி தருவாயம்மா
பதுளை மாநிலத்தில் அமர்ந்தவளே காளியம்மா
அதர்ம செயல் அறுத்தெறிய விரைந்து நீ வாராயம்மா
அச்சமில்லா வாழ்வெமக்கு வேண்டுமம்மா
அஞ்சாமல் நாம் வாழ வழி தருவாயம்மா
வீறுகொண்டு எழுந்தருளும் காளியம்மா
வீணர்களை அடக்கிடவே வாராயம்மா
வளம்பெற்று நாம் வாழ வேண்டுமம்மா
வாழ்த்தி நாம் வாழ வழி தருவாயம்மா
பயம் போக்கி காத்தருளும் காளியம்மா
துணையிருந்து எமைக்காக்க வாராயம்மா
உளவுறுதி எமக்களிக்க வேண்டுமம்மா
உற்றதுணையதற்கு நீ தருவாயம்மா
மலைசூழ்ந்த பெரு நிலத்திலுறை காளியம்மா
மகிழ்ச்சி பொங்க அருள் தரவே வாராயம்மா
நம் வாழ்வு உறுதிபெற வேண்டுமம்மா
அனைத்தையும் தந்தருள்வாய் தாயே காளியம்மா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button