...
செய்திகள்

பதுளை- ஹாலிஎல அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் …

நலம் தரும் நாயகனே எங்கள் சித்தி விநாயகரே
நம் துணையாய் நீயிருந்து நலன் காக்க வேண்டுமய்யா
நம்பியுன்னடி பணியும் நமக்கு நல்லருள் தந்திடய்யா
உன்னடி பற்றிநிற்கும் எம்மைக் காத்திட வந்திடய்யா
பதுளை மாநிலத்தினிலே கோயில் கொண்ட விநாயகரே
பணிந்து நிற்கும் எமக்குத் துணையாய் இருந்திடய்யா
போற்றித் தொழும் எமக்கு ஆறுதல் தந்திடய்யா
உன் திருவருளாளே நாங்கள் ஏற்றம் பெறவேண்டுமய்யா
வீதியின் அருகினிலே வீற்றிருக்கும் விநாயகரே
வேண்டும் வரம் தந்து ஆதரிக்க வேண்டுமய்யா
வெற்றிகள் சூழ்ந்துவர எம்மை வாழவைப்பாயய்யா
உன் கருணை மழை எங்கும் பொழிந்திட வேண்டுமய்யா
மலைசூழ்ந்த பெருநிலத்தில் கோயில் கொண்ட விநாயகரே
மலைத்து தவிக்கும் நிலையகற்றி எமக்கு அருளிடைய்யா
மனந்தளரா மனவுறுதி நாம் பெறவேண்டுமய்யா
உன் துணையாலே நாங்கள் உயர்ந்திட வேண்டுமய்யா
ஆறுகாமம் என்ற பண்டைய திருவிடத்தில் நின்றருளும் விநாயகரே
ஆறுதல் தந்தெம்மை அரவணைக்க வேண்டுமய்யா
இழி நிலை அண்டாமல் இருக்க வேண்டுமய்யா
உன் பார்வையாலே நாங்கள் வளம் பெற உதவிடைய்யா
ஹாலிஎல நகரினிலே இன்றிருந்தருளும் விநாயகரே
அணைத்தெம்மை ஆதரிக்க தயக்கம் கொள்ள வேண்டாமய்யா
ஒன்று பட்டு நாங்கள் உயர்வடைய வேண்டுமய்யா
உன்னைந்து கரங்களால் அணைத்தருள வேண்டுமய்யா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen