ஆன்மீகம்

பதுளை ஹாலிஎல – அருள்மிகு ஸ்ரீ வீரசக்தி விநாயகர் திருக்கோயில்

ஊவா மாகாணம்- பதுளை மாவட்டம் ஹாலிஎல- அருள்மிகு ஸ்ரீ வீரசக்தி விநாயகர் திருக்கோயில்

நம்பித் தொழுவோரின் நலன் காக்கும் விநாயகர்
எங்கும் நிறைந்திருந்து ஏற்ற துணை தந்திடுவார்
கேட்ட வரம் கொடுக்கின்ற மூத்தபிள்ளை விநாயகர்
நலமே நமக்கருள்வார் அண்டி அருள் பெற்றிடுவோம்

ஊவா மாகாணத்தில் உதித்திட்ட விநாயகர்
வற்றாத அருட்கருணை வழங்கி அருள் தந்திடுவார்
கவலைகள் துடைத்தெறிவார் காவலாய் இருந்திடுவார்
நம்பித் தொழுதிடுவோம் நன்மைகள் பெற்றிடுவோம்

ஹாலி எல நகரினிலே கோயில் கொண்ட விநாயகர்
அச்சமின்றி நாம் வாழ அனுதினமும் உடனிருப்பார்
அஞ்சும் நிலை அண்டாமல் காத்திடுவார் விநாயகர்
அடிதொழுது அவரருளைப் பெற்றிடுவோம்

மலை சூழ்ந்த மாநிலத்தில் உறைகின்ற விநாயகர்
மலைத்து நிற்போர் மனக்கவலை போக்கிடவே உடனிருப்பார்
முன்னேறும் வழிகாட்டி முந்திச் செல்லச் செய்திடுவார்
அவரடியைப் பற்றி நின்று வெற்றிகளைப் பெற்றிடுவோம்

அண்டி வரும் அடியவரை அரவணைக்கும் விநாயகர்
அரவணைத்துக் காத்து என்றும் உடனிருப்பார்
அதர்ம நிலை அண்டாமல் தடுத்தெம்மைக் காத்திடுவார்
நெருங்கியவர் பாதம் பற்றி நன்மைகளைப் பெற்றிடுவோம்

மதிதனிலே உறைந்திருந்து வழிகாட்டும் விநாயகர்
நத்தியடி பணிவோர் நலன் காக்க உடனிருப்பார்
நித்தம் நல்லருளை வழங்கி நமைக் காத்திடுவார்
வீரசக்தி விநாயகரை தொழுது நலன் பெற்றிடுவோம்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button