செய்திகள்

பதுளை- ஹாலி எல போஹாமலித்த பகுதியில் அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனைச் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

ஹாலி எல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போஹாமலித்த பகுதிகளில் அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யப்த குற்றச்சாட்டில் இன்று (21) 40 வயதான நபர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

பதுளை நுகர்வோர் அதிகார சபையின் உயர் அதிகாரி சாண்யாப்பா ரத்ன அவர்களின் தலைமையில் பதுளை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள், மற்றும் ஹாலி எல பொலிஸ் பிரிவினர் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் இவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இடம்பிடித்து 18 எரிவாயு சிலிண்டர்கள் கைபற்றியதாக ஹாலி எல பொலிஸ் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை பதுளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை ஹாலி எல பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button