செய்திகள்பதுளைமலையகம்

பது/ கோணக்கலை தமிழ் தேசிய பாடசாலையில் புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

பது/ கோணக்கலை தமிழ் தேசிய பாடசாலையில் அண்மையில் அதிபராக பதவி ஏற்ற சூரியவங்சிக தேச அபிமான உத்தம குரு பத்துரும் அகில இலங்கை சமாதான நீதவானும் ஆகிய சந்தானம் ராஜேந்திரா அவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்றைய தினம் பது/ கோணக்கலை தமிழ் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள் கல்வி சாரா ஊழியர்கள் மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் மற்றும் பாடசாலை சமூகத்தினரினால் மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு கலை கலாசார நிகழ்வுகளுடன் மதிய போசண உணவுகள் வழங்கப்பட்டு விழா விமரிசையாக இடம்பெற்றது.

அதிபர் சந்தானம் ராஜேந்திரா அவர்கள் கமேவெல திருவள்ளுவர் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை கற்று பின்னர் பதுளை சரஸ்வதி தமிழ் தேசிய பாடசாலையில் உயர்தரம் வரை கற்று கமேவெல திருவள்ளுவர் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் உப அதிபராகவும் அதிபராகவும் 30 வருடங்கள் கடமையாற்றியதுடன் அப்பாடசாலையின் வளர்ச்சிக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராமு தனராஜா

Related Articles

Back to top button