கல்விசெய்திகள்பதுளைமலையகம்

பது/ கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக திரு.ராஜேந்திரன் அவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

பது/ கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இன்றைய தினம் புதிய அதிபராக திரு ராஜேந்திரன் அவர்கள் சுப வேளையில் கடமைகளை பொறுப்பேற்றதோடு பாடசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.‌

அத்துடன் புதிய அதிபரை பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் புதிய அதிபரை வரவேற்றனர்.

முன்னாள் அதிபர் திரு நவரட்ணராஜா அவர்கள் ஓய்வு பெற்று சென்றமையை தொடர்ந்து மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் குறித்த பாடசாலைக்கு அதிபராக திரு ராஜேந்திரன் அவர்கள் நியமிக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராமு தனராஜா

Related Articles

Back to top button