மலையகம்

பத்தனையில் தீக்கிரையான முச்சக்கர வண்டி

த்தனைபத்தனை – மவுண்ட்வேர்ணன் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று தீக்கிரையான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், பத்தனை நகரிலிருந்து திம்புள்ள சென்ற வண்டியே தீப்பற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பத்தனை நகரிலிருந்து வயோதிபர் ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்ற முச்சக்கர வண்டியில் புகை வர வாகன சாரதி அதனை பார்வையிட திடீரென முழுவதுமாக பற்றிக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுகின்றது.

இதன்போது, வாகன சாரதியும் வயோதிபரும் முச்சக்கரவண்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும், இயந்திர கோளாரே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பம் குறித்து பத்தனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com