செய்திகள்நுவரெலியாமலையகம்

பத்தனை ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர் வழங்கும் பத்தனை ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் கொட்டகலை வூட்டன் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாக காவல் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த நபரின் மரணம் தொடர்பாக பலகோணங்களில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நுவரெலியா நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen