செய்திகள்

பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் யுவதி ஒருவர் விழுந்து காணாமல் போய் யுள்ளார்..

பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து 19வயது யுவதி விழுந்து காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.!
திம்புளை – பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் இன்று (18) மாலை யுவதி ஒருவர் தவறி விழுந்து காணமல் போயுள்ளதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பெண்களில் ஒருவரே இவ்வாறு நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர் வீழ்ச்சியின் உச்சிக்கு கால் கழுவ சென்ற யுவதி ஒருவரே இவ்வாறு கால் வழுக்கி நீர் வீழ்ச்சியில் விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தலவாக்கலை லிந்துலை லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயதான மணி பவித்ரா என்ற யுவதியே இவ்வாறு நீர் வீழ்ச்சியில் விழுந்து காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button