...
செய்திகள்

பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயின்ஸ்பெரி தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு..

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை குயின்ஸ்பெரி தோட்ட தொழிற்சாலைக்கு செல்லும் வீதிக்கு அருகாமையில் 12.01.2022 இன்று காலை சுமார் இரண்டடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த  சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சிறுத்தை விஷ உணவு உட்கொண்டு உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்பது தொடர்பாக பத்தனை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் உடலில் காயங்களும் காணப்படுகின்றன.குறித்த உயிரிழந்த சிறுத்தை தொடர்பாக கம்பளை வனஜீவராசிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Related Articles

Back to top button


Thubinail image
Screen