செய்திகள்

பத்தரமுல்லையில் பல்பொருள் அங்காடிக்கு அருகில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

பத்தரமுல்லையில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (26) இரவு பல்பொருள் அங்காடிக்கு அருகில் ஒருவர் விழுந்து கிடந்துள்ள நிலையில் அவர் கொஸ்வத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாலபே, பொத்துஅராவ வீதியில் வசிக்கும் 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பல்பொருள் அங்காடியில் இருந்து வெளியேறும் போது அருகில் இருந்த யாசகருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் யாசகர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button