மலையகம்விளையாட்டு

பத்தாயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்..

13ஆவது தெற்காசியப் போட்டி விழாவில் பத்தாயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

நேபாளத்தில் நடைப்பெற்று வரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று இடம்பெற்ற 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியிலேயே குமார் சண்முகேஸ்வரன் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.

பந்தயத் தூரத்தை 30 நிமிடம் 49.20 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

தங்கத்தை இந்தியாவும் (30,49,20), வெண்கலத்தை நேபாளமும் (30,50,06) வென்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download