செய்திகள்

பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை

பத்தேகம பிரதேச சபையின் தலைவர் அனுர நாரன்கொட பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

பத்தேகம நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அவரை அழைத்துச் சென்ற போது இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய வந்துரம்ப பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். 

அதன்படி, 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் மற்றும் இரண்டு சரீர பிணை அடிப்படையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

Related Articles

Back to top button
image download