மலையகம்

பனாவத்த தோட்ட மக்கள் அசுத்தமான ஆற்று நீரை குடிக்கும் நிலைக்கு யார் காரணம்.. ?

கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட பனாவத்த தோட்ட
மக்கள் அசுத்தமான ஆற்று நீரை குடிக்கும் நிலை ?இல.1 பிரிவில்100 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் தினம் குடிநீர் எடுப்பதற்கு தோட்ட லயன் குடியிருப்புகளில் இருந்து சுமார் 01கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்தில் இருக்கும் களனி கங்கையில் ஆற்றிலே இரங்கியே குடிநீர் பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் பெற்றுக்கொள்ளும் களனி ஆற்று நீரானது கிதுல்கல பிரதேசத்தில் சுற்றுலா பயணிகள் அதிகமாக பயன்படுத்தி வெளியேறும் கழிவு நீரையே தாம்
குடிப்பதற்காக பயன்படுத்த வேண்டிய நிலை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு முறையும் அரசியல்வாதிகள் தம்மை ஏமாற்றுவதாகவும் குறித்த பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வயதானவர்கள் தொடக்கம் சிறு பிள்ளைகள் வரை குடிநீர் எடுப்பதற்கும் மற்றும் குழிப்பதற்காகவும் இந்த ஆற்றுக்கே செல்லவேண்டி இருப்பதாகவும் ,இதனால் தாம் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் இதன் போது தெரிவித்தனர் .

அதிகாலை வேலைக்கு செல்பவர்கள் நீர் எடுப்பதற்க்கு ஆற்றுக்கு செல்லும்போது குறித்த பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதால் அச்சத்துடன் செல்லவேண்டி இருப்பதாகவும் , இரவு நேரங்களில் வேலைக்கு சென்ற வீடு வந்து குளிக்க கூட நீரில்லாத நிலையில் ஒரு வாரத்துக்கு ஒரு நாள் குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு முறையும் அரசியல் சார்ந்தவர்கள் தம்மை ஏமாற்றி வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்ற போதிலும் மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொள்வதில்லை என இவர்கள் கண்டனம் தெரிவித்தனர். களனி ஆற்று நீராடுவதால் பிள்ளைகளுக்கு தோல் அரிப்பு வியாதிகள் ஏற்பட்டுள்ளதாகவும் தோட்ட மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பிரதேச அரசியில் ,அரசு சார்ந்தவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா ?

Related Articles

69 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button