உலகம்

(video)பனி புயல் கரையை ஒடிசாவின் பூரி கடலோர பகுதிகளில் கடந்தது

புவனேஸ்வர் பனி புயல் இந்தியாவின் ஒடிசாவின் பூரி கடலோர பகுதிகளில் இன்று 240 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது. 

இதன் பொது ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சேத்தி வெளியிட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான தாழமுக்கம் பனி புயலாக வலுப்பெற்று இந்தியாவின் ஒடிசா நோக்கி நகர்ந்து கோபால்புர் மற்றும் பூரியின் தெற்கே உள்ள சந்த்பாலி இடையே இன்று கரையைக் கடந்தது.

இப் புயலால் 10 ஆயிரம் கிராமங்களும் 52 நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்புயல் காரணமாக 11லட்சம் பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக இடம்பெயர்ந்து உள்ளதாகவும் சுமார் 233 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com