செய்திகள்

பன்னல- பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல் இருவருக்கு காயம் ..

பன்னல பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இருவரும் தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மோதலில் மாணவர் ஒருவரின் பாதம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய மாணவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தரம் 12 மற்றும் 13 இல் கல்வி கற்கும் மாணவர்களே மோதலில் காயமடைந்துள்ளனர்.

பாடசாலைக்கு கைடயக்க தொலைபேசியை கொண்டு சென்ற விடயத்தை முன்வைத்தே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

Related Articles

Back to top button