...
உலகம்செய்திகள்

‘பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்தப்பட்டது’ – அமெரிக்க வைத்தியர்கள் வரலாற்று சாதனை!

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி அமெரிக்க வைத்தியர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

மருத்துவ உலகில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மிருகங்களின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் முயற்சியில் வைத்தியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பன்றியின் இதயம் மனிதர்களின் இதயத்துடன் ஒத்துபோவதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் அதனை மனிதர்களுக்கு பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காததை அடுத்து வேறு ஆய்வில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி பன்றியின் இதயத்தை மரபணு மாற்றம் மூலம் மனிதருக்கு ஏற்ப உருவாக்கி அதனை மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்வதற்கான சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி அமெரிக்க வைத்தியர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen