பம்பரகலை பகுதி பஸ் தரிப்பிடத்தை புணரமைத்து தருமாறு பொது மக்கள் வேண்டுகோள்

தலவாக்கலை – ராஹன்வத்த பிரதான வீதியில் பம்பரகலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் காணப்படும் பிரதான பஸ் தரிப்பிடம் மக்கள் பாவணைக்கு உகந்த நிலையில் காணப்படாமையினால் இந்த பகுதி மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இந்த பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த கட்டடமானது நுவரெலியா பிரதேச சபையினால் சுமார் 20 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது.
அதற்கு பிறகு இக்கட்டடத்தில் எவ்வித புணரமைப்பு வேலைகளும் இடம் பெறவில்லை.
இதன் காரணமாக இக்கட்டடம் இன்று முழுமையாக பொதுமக்கள் பாவனைக்கு ஏற்றதாக இல்லை, சுவர்களில் வெடிப்புகள் காணப்படுவதுடன் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.
இந்த பாதையில் ஊடாக நாளாந்தம் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் நோயாளிகள் என பலர் செல்கின்ற நிலையில் மழை வெயில் காலங்களில் பஸ் வரும்வரை அமர்ந்து இருக்க இருக்கைகள் கூடி இல்லாத நிலை காணப்படுகிறது.
தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபையின் தேர்தல் வட்டாரத்தின் கீழ் இந்த பஸ் தரிப்பிடம் காணப்படுவதால்
அக்கரபத்தனை பிரதேச சபையின் ஊடாக இந்த பஸ் தரிப்பிடத்தை புணரமைத்து தருமாறு இந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.