செய்திகள்

பயணக் கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் எச்சரிக்கை.!

நாட்டில் தற்போது பதிவாகும் கொவிட் தொற்றாளர்களில் அதிகரிப்பு ஏற்பட்டால் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை அமுலிலிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இன்று முதல் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டாலும் சன நெரிசலை கட்டுப்படுத்த வர்த்தகர்கள் உரிய நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதேவேளை, பயணத் தடை அமுலில் இல்லாத காலப்பகுதியிலும் மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

Back to top button