செய்திகள்

பயணக்கட்டுப்பாடு விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இதுவரை 45,532 பேர் கைது

பயணக்கட்டுப்பாடு விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த 24 மணி
நேரத்தில் 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி, கம்பளை மற்றும்
குளியாபிட்டி ஆகிய இடங்களில் பலர் கைதுகள் செய்யப்பட்டுள்ளனர்.

கண்டியைச் சேர்ந்த 67 பேரும், கம்பளையைச் சேர்ந்த 56 பேரும், குலியாபிட்டியைச்
சேர்ந்த 43 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 45532 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடுகளை மீறி மாகாணங்களுக்கு வருகை தந்த
86 பேர் நேற்று திருப்பி விடப்பட்டனர் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட
பிரதிபொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹாண மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download