செய்திகள்

பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை.!

இன்று (10) முதல் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும், தற்போது விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

புதிய சுற்றறிக்கையின் பிரகாரம், திருமண வைபவங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருமண மண்டபங்களில் 25 சதவீதம் அல்லது 150க்கும் குறைந்த அளவில் நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகாத மரணங்களின் இறுதிக் கிரியைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சடலம் விடுவிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் இறுதி கிரியைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இறுதிக் கிரியைகளில் 50 பேர் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வழிபட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை, மாநாடுகள், கருத்தரங்குகள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இவற்றில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button