...
செய்திகள்

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் அதிகரிப்பு!

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் அதிகரித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் ரூபா 60 மில்லியனாக அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரான கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றுக்கு முன்னர் இலங்கை போக்குவரத்து சபையின் சராசரி நாளாந்த வருமானம் ரூ.80-85 மில்லியனுக்கு இடைப்பட்டதாகும்.இதேவேளை, கொவிட்-19 தொற்றுநோயின் போது வருமானம் ரூ.6-7 மில்லியனாகக் குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபை பொது மக்களின் பாதுகாப்பை எப்பொழுதும் உறுதி செய்யும். ‘சிசு செரிய’ பஸ் சேவையின் மூலம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும்
அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen