Breaking Newsசெய்திகள்

பயணக் கட்டுப்பாடு குறித்து புதிய அறிவிப்பு

நாளை இரவு 11 முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரையில் நாடு முழுவதும் பயண தடை விதிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்றுமுன்னர் தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மேல் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

This image has an empty alt attribute; its file name is Shavendra-silva-Army-commander-613x394-2.jpg

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com