செய்திகள்

பயணத்தடை குறித்து இராணுவத்தளபதி கூறியுள்ள முக்கிய விடயம்.

(ராகவ்)

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையின் தாக்கம் குறித்து அவதானித்து வருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய வார இறுதியில் பயணக்கட்டுப்பாடு குறித்து மதிப்பீடு செய்யப்படுவதாக இராணுவத்தளபதி கூறினார்.

அதன்படி பயணக் கட்டுப்பாடு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ,
அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை மக்கள் தவறாக பயன்படுத்த முயற்சித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.

பயணத் தடையின் போது அனைத்து கடைகளும் பொது இடங்களும் மூடப்பட்டிருந்தமையின் காரணமாக கொரோனாத் தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ளதாக இராணுவத்தளபதி சுட்டிக்காட்டினார்.

Related Articles

Back to top button