செய்திகள்

பயணத்தடை நேரத்தில் கசிப்பு உற்பத்தி நடாத்திய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டாஞ்சேனை வாவியின் தீவுப் பகுதியில் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இன்று ஏறாவூர் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்தே இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, அங்கிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டதுடன் சுமார் 3 இலட்சம் லீட்டர் கசிப்பும் கோடாவும் கைப்பற்றப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.ஷியாம் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கொரோனா அச்சம் காரணமாக மதுபானசாலைகள் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதால் சட்டவிரோதமாக இவ்வாறு கசிப்பு உற்பத்திகளும் விற்பனையும் கிராமப் பகுதிகளில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

Related Articles

Back to top button