பயணிகளுடன் நிஜமாகவே பஸ் ஓட்டிய நடிகை!
தயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் ‘இப்படை வெல்லும்’ படத்தில், அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் உதயநிதியின் அம்மாவாக நடித்துள்ள ராதிகா, பஸ் டிரைவராக நடித்துள்ளாராம். இதற்காக, பஸ் ஓட்டி பயிற்சி பெற்ற பிறகு நடித்துள்ளார் ராதிகா.
இதுகுறித்து ராதிகா கருத்து வெளியிடும் போது ,
‘உங்களால்தான் முடியும் என்று ஒரு இயக்குனர் வந்து நிற்கும்போது எப்படி மறுக்க முடியும்.
வீட்டில் எல்லோரும் தடுத்தார்கள். அவர்களை மீறி பஸ் ஓட்ட பயிற்சி எடுத்து ஓட்டினேன்.
இப்போது எனக்கு கூடுதலாக ஒரு தொழில் தெரியும். நிஜ வாழ்க்கையில் இது எனக்கு எந்த அளவிற்குப் பயன்படும் என்று தெரியவில்லை’ என்றார்.
நடிகை ராதிகா எப்போதும் துணிச்சலான நடிகை எனப் பெயர் பெற்றவர்.
நடிகைகள் சாதாரண விஷயங்களுக்குக் கூட பயந்து நடுங்குவார்கள் எனும் பேச்சுகளை உடைக்கக் கூடியவர்.
தனக்கு சவாலான கேரக்டர்களை எடுத்து நடிக்கக்கூடிய ராதிகாவின் நடிப்பு இந்தப் படத்திலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.