...
செய்திகள்நுவரெலியா

நானுஒயா-பயண சீட்டின்றிய இலவசப் பயணம்

புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் 

இடமாற்றங்கள், ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, மற்றும் பழுதடைந்த ரயில் பெட்டிகளை சரி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் இப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதன் முதல் கட்டமாக  பொதிகளை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்தி , பயணச்சீட்டு வழங்குவதையும் தவிர்த்து புகையிரத நிலைய ஊழியர்கள் போராட்டத்தில்  முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது . 

இதனால் இன்றைய தினம் (24) நானுஒயா ரயில் நிலையத்தில் பயண சீட்டு விநியோகிக்கும் பகுதி முற்றாக மூடப்பட்டுள்ளதாக நானுஒயா ரயில் நிலைய பொருப்பதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.இதனால் ரயிலில் பயணம் செய்தவர்கள் பயண சீட்டு இல்லாமல் இலவசமாக பயணம் செய்ததை காணக்கூடியதாக இருந்தது .

இதேவேளை, இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினா் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். செ.திவாகரன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen