செய்திகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச திருப்பதி விஜயம்!

இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று (24.12.2021) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு தங்கினர்.

அதனையடுத்து, இன்று காலை சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோவில் நுழைவாயிலில் தேவஸ்தான செயல் அலுவலர் ஜபகர் ரெட்டி, அர்ச்சகர்கள் மரியாதையுடன் மஹிந்த ராஜபக்சவை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வைத்தனர்.

சுவாமி தரிசனத்திற்கு பிறகு மகிந்த ராஜபக்ச பின்னர் தங்க கொடி மரத்தை தொட்டு வணங்கி தரிசனம் செய்தார். இதையடுத்து ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் செய்து வைக்க தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்களை வழங்கினர்.

இன்று (24.12.2021) மாலை வரை திருமலையில் தங்கும் அவர், மாலை நாடு திரும்பவுள்ளார்.

Related Articles

Back to top button