...
செய்திகள்மலையகம்

ப்ரன்லி ஷிப் அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவ வதிவிட பயிற்சி முகாம்.

சமூக விடியலை நோக்கிய பயணத்தில் தன்னலமற்ற சமூக சேவையின் தனது தடத்தை பதித்து கொண்டிருக்கும் ப்ரன்லி ஷிப் அமைப்பினரால் இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவ ஒரு நாள் வதிவிட பயிற்சி முகாமானது 2021.11.13 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 2021.11.14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை புத்தல மெதலந்த விருந்தக வளாகத்தில் நடத்தப்பட்டது.

ப்ரன்லி ஷி ப் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பதுளை, பண்டாரவளை, பசறை, ஹப்புத்தளை மற்றும் நுவரெலியா என பல இடங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.

பயிற்சி முகாமின் முழுநேர வளவாளர்களாக ப்ரன்லி ஷிப் அமைப்பின் கௌரவ தலைவர் சேகர் யசோதராஜன் உட்பட கெப்டன் பர்ஹான் ஆரிபா மற்றும் கெப்டன் குளோரி டூல்ராஸ் அல்ரோய் பிராங்லின் ஆகியோர் தலைமையேற்று நடாத்தியிருந்தனர்.

பயிற்சி முகாமிற்கான அனுசரணையை Save the children நிறுவனமும் பிரத்தியேக ஒத்துழைப்பை ஊவா மாகாண தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் வழங்கியிருந்தனர்.

பயிற்சியின் நிறைவில் பங்குபற்றல் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

– நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen