அரசியல்

பரபரப்பான சூழ்நிலையில் ஜனாதிபதியின் உரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க வழிமொழிந்து உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையே சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

தங்களது ஆதரவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கிவதாக இவர்கள் அறிவித்துள்ளதுடன், புதிய அமைச்சரவை நாளை நியமிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button