`பரமபதம் விளையாட்டு’ விளையாடும் த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா அடுத்ததாக நடித்து வரும் படத்திற்கு `பரமபதம் விளையாட்டு’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் 15 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷா – அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்திருக்கும் `சதுரங்கவேட்டை-2′ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
இதுஒருபுறம் இருக்க `மோகினி’, `கர்ஜனை’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் `1818′ படத்திலும், நிவின் பாலி ஜோடியாக `ஹே ஜுட்’ என்ற மலையாள படத்திலும், விஜய் சேதுபதியுடன் `96′ படத்திலும் நடித்து வருகிறார்.
இதுதவிர தற்போது திருஞானம் இயக்கத்தில் `பரமபதம் விளையாட்டு’ என்ற புதிய படத்தில் தற்போது நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். நந்தா, ரிசார்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை 24 HRS நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆற்காடு கோட்டையில் வைத்து நடைபெறுகிறது. இந்த கோட்டையை பலநூறு வருடங்களுக்கு முன்னர் மன்னர் ஔரங்கஜிப் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
முதல்கட்ட படபிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படபிடிப்பு இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு அம்ரிஷ் இசையமைக்கிறார்.