...
செய்திகள்

பராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்தவிற்கு வீடொன்றை பெற்றுக்கொடுக்க பிரதமர் நடவடிக்கை

டோக்கியோவில் நடைபெற்ற 2020 பராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு புதிய வீடொன்றை பெற்றுக் கொடுக்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேராவிற்கு அறிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் வீடமைப்பு திட்டத்திலிருந்து குறித்த வீட்டை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய உரிய வீடமைப்பு திட்டமொன்றை தெரிவுசெய்து குறித்த வீட்டை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா அவர்கள், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உதய நாணாயக்கார அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் ஊடக பிரிவு

Related Articles

Back to top button


Thubinail image
Screen