...
விளையாட்டு

பராலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற தினேஷ் – துலானுக்கு பண வெகுமதி!

பராலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பண வெகுமதி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2020 பராலிம்பிக் போட்டிகளில் F46 ஆண்கள் குழுவின் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையைப் பதிவு செய்து தினேஷ் பிரியந்த தங்கப்பதக்கத்தை வென்றார்.

அத்ததுடன் F64 ஆண்கள் குழுவின் ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த துலான் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அதற்கமைய, மேற்படி வெற்றிகளை ஈட்டித்தந்த விளையாட்டு வீரர்கள் இருவருக்கும் பயிற்றுவிப்பாளருக்கும் தேசிய விளையாட்டு சபையின் பரிந்துரைக்கமைய பணப்பரிசு வழங்குவதற்காக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen