செய்திகள்

பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பில் வேலு யோகராஜ் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட
பாடசாலைகளில் நுழைவாயில் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர்
ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைய பரிசுத்த திருத்துவ மத்திய
கல்லூரியின் பழைய மாணவரும் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ்
தலைமையில் இன்று (05) பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரியில் கலந்துரையாடல்
ஒன்று இடம்பெற்றது.

இதன் போது கல்லூரியின் அதிபர் மற்றும் உப அதிபர் , பழைய மாணவர் சங்க
செயலாளர், பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்.

இதன்போது கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு அதன் முகப்பு
நுழைவாயில் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கைகள் சம்பந்தமான விடயங்கள் ஆராயப்பட்டது.

மேலும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன்
தொண்டமான் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு
உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்
பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானம் புனரமைப்பு மற்றும்
அடிக்கல் நாட்டு நிகழ்வு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் யாவும் இராஜாங்க
அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அவருடைய
ஆலோசனைக்கமைய வேலைத்திட்டங்களை மேற்கொள்வோம் என தவிசாளர் அவர்கள்
கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களிடம் தெரிவித்துக் கொண்டார்.

-யோகராஜ்

Related Articles

Back to top button