மலையகம்

பரிதாபகரமாக உயிரிழந்த மாணவன்

புஸ்ஸவ்வாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரட்டைபாதையில் மகாவலி கங்கைளின் கிளை ஆறரன செல்வகந்த ஆற்றிற்கு குழிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் பாடசாலை விடுமுறை நாட்களாக இருந்த போதும் பாடசாலைக்கு செல்லாது மகாவலி கங்கைளின் கிளை ஆறரன செல்வகந்த ஆற்றிற்கு தனது 5 நண்பர்களுடன் குழிக்க சென்ற 18 வயதுடைய மாணவன் நீரில் மூழ்கி பலியாகி உள்ளார்.

உயிரிழந்த மாணவனின் சடலம் இன்று காலை 9.00 மணியவில் (01) கடற்படை சுழியோடிகள் மூலம் மீட்கபட்டு கம்பனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதான தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் கண்டி பேராதெனிய கன்னொருவ ரணபிம ரோயல் கல்லூரியில் உயர்தர (2019) வர்த்தக பிரிவில் கல்வி பயின்று வந்த கம்பளையை சேர்ந்த ஜே.கஜனேஸ்வரன் என்ற மாணவன் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காணொளி இதோ…..

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com