...
உலகம்

பரிஸில் தமிழர்களான தாயும் மகளும் படுகொலை

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகரப் பகுதி ஒன்றில் தாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.52 வயதான தாய் மற்றும் 21 வயதான மகள் ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில், மிகவும் அதிர்ச்சியடைந்த நிலை யிலிருந்த தந்தையும் இரு ஆண் பிள்ளைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.புலம்பெயர்ந்து வசிக்கும் அங்கு வதியும் தமிழ்க் குடும்பத்தினரின் வீட்டிலேயே இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன.
கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் உடனடியாகத் தெரிய வரவில்லை.நேற்று முன்தினம் காலை வீடு திரும்பிய தந்தையார் மனைவியும் மகளும் வீட்டு அறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயங்களுடன் சடலங்களாகக் கிடப்பதைக் கண்டதாகக் கூறப்படுகின்றது.அயலவர்கள் பொலிஸாருக்கும்,அவசர மீட்புப் பிரிவினருக்கும் அறிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த அவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்ததந்தையையும் இரு புதல்வர்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர் என்று கூறப்படுகின்றது.இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen