செய்திகள்

பரீட்சைகள் ஆணையகத்தினால் உயர்தர, சாதாரணதர பரீட்சைகளுக்கான விசேட அறிவித்தல்

2021 உயர்தரப் பரீட்சைக்காக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்று
ஆரம்பமாகின்றது.இவ் விண்ணப்பங்கள் (online )ஊடாக விண்ணபிக்க முடியும். என
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித்த தெரிவித்துள்ளார் .மற்றும் இவ்
விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை கால அவகாசம்
.வழக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து கொவிட் தொற்று காரணமாக குறித்த
நேரத்திற்கு பரீட்சைகளை நடத்தி முடிப்பதில் பரீட்சைகள் ஆணையகம் பல்வேறு
சிரமங்களுக்கு எதிர்நோக்குகின்றது . அந்த வகையில் நடந்து முடிந்த கல்வி பொது
தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான செயன்முறை பரீட்சைகளை நடத்தி
முடிப்பதற்காக விசேட கருத்து கணிப்பொன்றை பெற்றோர்கள் மத்தியில்
நடாத்த பரீட்சைகள் ஆணையகம் முடிவு செய்துள்ளது

கடந்த மே மாதத்தில் நடத்தப்படவிருந்த, கல்வி பொது தராதர சாதாரண
தரப்பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள், கொரோனா தொற்று நிலைமையினால்
தாமதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு மேலதிகமாக, செயன்முறை பரீட்சை நடாத்துவது தொடர்பில் மதிப்பீடு செய்யும்
விசேட குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button