செய்திகள்நுவரெலியாமலையகம்

பறித்த கொழுந்தை வீசுமாறு கூறிய அதிகாரி..?

மஸ்கெலியா – பெரிய சோலாங்கந்த பெருந்தோட்ட தொழிலாளர்களினால் பறிக்கப்படும் கொழுந்தை வீசுமாறு தோட்ட அதிகாரி கூறியதாக பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

கடந்த சில காலமாகவே அதிகாரியொருவர் இவ்வாறு கூறி வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பெருந்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்றைய தினம் கொழுந்து பறித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்றைய தினம் பணிக்கு சென்ற தொழிலாளர்கள், 50 கிலோகிராமிற்கு அதிகமான கொழுந்தை பறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதையடுத்து, கொழுந்தை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், பறித்த கொழுந்தை தொழிற்சாலைக்கு அனுப்ப முடியாது எனவும் தோட்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

உழவு இயந்திரத்தில் ஏற்றப்பட்ட கொழுந்தை, கீழே வீசுமாறும் அவர் குறிப்பிட்ட நிலையில், அங்கு அமளிதுமளி ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான பின்னணியில், தோட்டத் தலைவர்கள், குறித்த தோட்ட அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, பறிக்கப்பட்ட கொழுந்தை தொழிற்சாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தோட்ட அதிகாரி அண்மை காலமாகவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக பெரிய சோலாங்கந்த வட்டார உறுப்பினர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நன்றி Trueceylon News

Related Articles

Back to top button