
மத்திய மாகாணம், பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு கரை பகுதியிலும் வடக்கு, வட மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசுமென திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், இடி மின்னல் தாக்கங்களிலிருந்து ஏற்படும் சேதங்களை குறைத்துக் கொள்ளும் நோக்கில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.