...
விளையாட்டு

பலமான மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இலங்கையின் இளம் அணி

021 T20 உலகக்கிண்ண தொடரில்  35 வது  லீக்  ஆட்டத்தில், இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில்நேற்று (04) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சரித் அசலங்க 68 ஓட்டங்களையும், பெதும் நிசங்க 51 ஓட்டங்களையும் பெற்றனர்..

பந்து வீச்சில் என்ரு ரசல் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஹட்மயர் ஆட்டமிழக்காது 81 அதிகபட்சமாக பெற்றார்.

பந்து வீச்சில் வனிந்து அசரங்க, பினுர மற்றும் கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இலங்கை அணி சூப்பர் 12 சுற்றில் கலந்து கொண்ட 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen