செய்திகள்

பலாங்கொடையில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று.

பலாங்கொடை கிரிமெட்டிதென்ன பிரதேசத்தில்கொவிட்19 தொற்றாளர் ஒருவர் அடையாளம்
காணப்பட்டுள்ளார்.

இவ் வாறு அடையாளங் காணப்பட்டவர் அவிசாவளை ஆடை தொழிற்சாலை ஒன்றில்
பணிபுரிந்தவர் எனவும் குறித்த நபர் பலாங்கொடையில் பல்வேறு இடங்களுக்கு
சென்று வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் பலாங்கொடை கிரிமெட்டி தென்ன ,அபிமான கம பிரதேசத்திற்கு நான்கு நாட்கள்
சென்று வந்துள்ளதோடு , பலாங்கொடை விளையாட்டு மைதானம் ஒன்றில் இளைஞர்களோடு
விளையாடியுள்ளார்.

தற்போது முதற்கட்ட தொடர்புடைய 57பேரை சுய பாதுகாப்பு தனிமை படுத்தலுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளார்கள் .மேலும் குறித்த நபரோடு தொடர்புடைய ஏனையவர்களை
தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பலாங்கொடை சுகாதார பிரிவின் உயர்
அதிகாரி m.o.h.நூர்தீன் ரபாய்தீன் தெரிவித்தார்.

மொஹமட் அலி

Related Articles

Back to top button