செய்திகள்மலையகம்

பலாங்கொடையில் பஸ் விபத்து ; சாரதி பலி.!

பலாங்கொடை – ராஸ்சகல வீதியில் எல்லேவத்த பிரதேசத்தில் பஸ் ஒன்று 250 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் நோயாளர் காவு வாகனத்தின் மூலமாக குறித்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தேயிலை தொழிற்சாலையொன்றின் ஊழியர்களை அழைத்துச்சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், குறித்த ஊழியர்களை வீடுகளில் கொண்டுசேர்த்துவிட்டு திரும்பியபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தின்போது, சாரதி மாத்திரமே பஸ்ஸில் இருந்துள்ளதாக பொலிஸார் தொிவித்தனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button